Tuesday, November 13, 2012

அழகு நிலவே - பவித்ரா.. என் எண்ணங்கள்


அழகு நிலவே - பவித்ரா.. இசையோடும், பாடலோடும் ஒரு மெல்லிய மகிழ்ச்சியா அல்லது சோகமா என்று அறிய முடியாத ஒரு உணர்ச்சி இழையோடி இருக்கும்.
மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இந்தப் பாடலை என்றும் நான் கேட்டிருக்கின்றேன். உணர்ச்சிவசப்படுபவன் தானே மனிதன்.

Proud to say that I am an emotional idiot. 
After all Emotions makes me human every time.

இந்தப் பாடலின் வரிகளை, நான் கண்ட, படித்த, கடந்து வந்த அனுபவங்களின் புரிதலில் பதிவு செய்ய விரும்பினேன்.
/*
அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே 
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே 
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில் பாலைவார்த்தாயே 
என் பாதிஉயிரை திருப்பித் தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னைச் சுமந்ததில்லை நானும் உன் தாயே... 

*/
       யாரோ சிலரை பார்த்தவுடன், பழகியவுடன் நமக்குள் ஒரு பூரணமான உனர்வு வரும் அல்லவா? அந்த உணர்வை நீங்கள் எல்லாருடனும் பெற முடியாது. வெகு சிலருடன் மட்டுமே அது சாத்தியம்.
      இந்தப் பாடலை வெறும் ஆண்-பெண் காதலுடன் சம்பந்தப்படுத்தாதீர். நான் சொல்ல வருகின்ற உணர்வு அதற்க்கும் மேலானது. யாரோடும் நீங்கள் அதை உணரலாம். ஆண்-பெண் என்ற பேதம் இல்லை. மனிதன் - மிருகம் என்ற பாகுபாடில்லை. ஐயிரு திங்கள் சுமக்காமல், சுரக்கின்ற தாய்மை இது.
       ஒரு உரிமை, ஒரு மகிழ்ச்சி அவ்வளவு தான். மிகவும் எளிமையானது. ஆனால் அவ்வளவு எளிதில் சாத்தியப்படாதது. அண்பு, நேர்மை, உரிமையினால் மட்டுமே இது ஊற்றெடுக்கும்.
/*
சொந்தங்கள் என்பது தாய் தந்தது - இந்த 
பந்தங்கள் என்பது யார் தந்தது 

*/

     பிறப்பால் வந்த சொந்தங்கள் இல்லாமல் அன்பினால், நட்பினால், பாசத்தினால், காதலினால்; நீ தேர்ந்தெடுக்கும் சொந்தங்கள் மனதிற்க்கு நிறைவானவை.
    ரத்த சம்பந்தமில்லாமல், உனர்வுகளோடு சம்பந்தப்பட்டவை. யாரும் உனக்கு தராமல் நீயே கொண்ட பந்தங்கள் இவை. ரத்த உறவுகளில் கூட, நாம் சிலருடன் மிகவும் நெருக்கமாய் இருப்பதில்லையா? அது போலத்தான்.
/*
இன்னொரு தாய்மைதான் நான் கண்டது - அட 
உன்விழி ஏனடா நீர் கொண்டது 
*/

    ஆணோ, பெண்ணோ தாய்மை பொதுவானது. மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே, யாராலும் தாய்மையை உனர முடியும். உணர்ச்சி வசப்படுபவனே மனிதன்.
    நீ ஒரு உறவில் தாய்மையை உணர்ந்தால் அந்த சொந்தத்தை பிரிய நேர்ந்தாலும், மனம் ஒப்பாது, அந்த வலி கொடிது. ஞாபகம் உன் கட்டை வேகும் வரை தொடரும். மறக்க இயலாது.

/*
அன்புதான் தியாகமே அழுகைதான் தியானமே 
உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஊருக்குப் புரியாதே...
*/

    எந்தச் சூழ்நிலையிலும் ஒரு உறவுக்காக ஒருவன் கண்ணீர் சிந்தினால், அந்த உறவை அவனோ அவளோ இழக்க வேண்டாம் என உண்மையாக இருக்கிறான் என அர்த்தம்.
    எளிதில உணர்ச்சி வசப்படுவனை காட்டிக் கொடுப்பது கண்ணீரே. அவனே நினைத்தாலும் அதை மறைக்க முடியாது. எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் சில மனித்துளிகளில் வெளிப்பட்டுவிடும்.
    அழுபவன் முட்டாள் அல்ல; கையாள் ஆகாதவன் அல்ல; அவனே உண்மையானவன். எங்கே நாம் இதை இழந்துவிடுவமோ என்று பதைப்பவன். நெஞ்சில் பாசமும், நேர்மையும், மற்றவரை காயப்படுத்திவிடக் கூடாதென்ற கவலையை உண்மையாக உணர்பவன்.
   அழுகையில் என்றுமே நேர்மை இருக்கும்.

    இப்படிப்பட்ட உறவுகள் என்றுமே ஊருக்கு புரிவதில்லை.
     ஆணும் பெண்ணுமா கண்டிப்பாக இது காதல் தான் என நினைப்பது பொது புத்தி. ஏன் அம்மா-பிள்ளை உணர்வு வராதா? அல்லது அண்ணன் - தங்கை, அல்லது அப்பா - மகள். இவையனைத்துமே உணர்வு தானே?
     அதே போல் ஒரு வளர்ப்பு பிரானியிடம் மிக மிக நெருக்கமாய் அன்பு செலுத்துபவரை நிச்சயமாக மனநிலை சரியில்லாதவராகவே நினைக்கும் இந்த உலகும். புரியாவிட்டால் எட்டத் தள்ளி நில்லுங்கள். நீங்கள் அந்த உறவுகளை என்றும் புரிந்து கொள்ள முடியாது.
/*
பூமியை நேசிக்கும் வேர்போலவே - உன் 
பூமுகம் நேசித்தேன் தாயாகவே 
நீருக்குள் சுவாசிக்கும் மீன்போலவே - உன் 
நேசத்தில் வாழுவேன் நானாகவே 
உலகம் மாறுமே உறவுகள் வாழுமே 
கடலைவிடவும் ஆழம் எந்தன் கண்ணீர்த்துளி ஒன்றே...

*/
இவ்வளவுக்கும் பிறகு, இந்த வரிகளுக்கு என் கருத்து தேவை தானா?

1 comment:

Ramesh Ramar said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.Latest Tamil News