Saturday, August 21, 2010

ஆசை

பதிவு எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அது என்னவோ தமிழ் மீது ஒரு இனம் புரியாத ஆசை. எங்கே ஆரம்பித்தது என்று சரியாகத் தெரியவில்லை. பள்ளியில் படிக்கும் பொழுது வந்து இருக்க வாய்ப்பில்லை. என் பள்ளிப் படிப்பு முழுக்க நான் தமிழ் படித்ததில்லை. அதை பெருமையாக இல்லை மிகவும் சிறுமையாக நினைக்கின்றேன்.

ஐந்து வயது முதல் தினத்தந்தி படிக்கும் பழக்கம் இருக்கிறது. அப்படி தான் நான் தமிழ் படிக்க கற்றுக் கொண்டேன். பிறகு அது தினகரன், தினமலர் என்று மாறியது. காலை எழுந்தவுடன் கண்கள் திறப்பதே செய்தித்தாளில் தான். இன்று அது விகடன், குமுதம் மற்றும் தமிழ் பதிவுகள் வரை வந்து நிற்கிறது.


இதற்கு நடுவில் என் தந்தை எனக்கு அறிமுகப்படுத்தியது சாண்டில்யன், கல்கி மற்றும் கண்ணதாசன். ஒரு முறை அம்மை நோய் வந்து வீட்டை விட்டு எங்கும் செல்ல முடியாத நிலைமையில் எனக்கு இவர்களை என் தந்தை அறிமுகப்படுத்தினார். அங்கு இருந்து இன்னும் வெறி கொண்டு ஓட ஆரம்பித்தது என் ஆசை. எங்கே எந்த புத்தகம் கிடைக்கும் என்று அலைந்து இருக்கிறேன்.


என் தந்தை எனக்கு அறிமுகம் செய்த மற்றொருவர் சுஜாதா. "அறிவுஜீவி" இப்படி தான் என் தந்தை அவரை அழைப்பார். அவரை பற்றி பேசும் போதெல்லாம் மிகவும் வியந்து பேசுவார். அவரை பற்றி பேசும் போது கண்களில் ஒரு மின்னல் வந்து போகும்.

அதன் பிறகு என் நண்பர்கள். பொன்னியின் செல்வனையும், சிவகாமியின் சபதத்தையும் எனக்கு புதிதாக காட்டினார்கள். மறுபடியும் அங்கே இருந்து ஓட ஆரம்பித்தது என் ஆசை. இப்பொழுது இந்த பதிவு வரை வந்து நிற்கிறது. இது இங்கேயே நிற்க போவதில்லை. இன்னும் செல்லும். ஆனால்....

ஆனால், படிப்பது போல் அல்ல எழுதுவது. நிறைய படிக்க வேண்டும். நிறைய பேச வேண்டும். நிறைய அனுபவிக்க வேண்டும். பயிற்சி வேண்டும். இப்பொழுதுதான் நிறைய படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். மெதுவாக பின்னூட்டம் இட ஆரம்பித்து இருக்கிறேன். தைரியம் வரும் பொழுது ஒவ்வொரு பதிவாக (படியாக) ஆரம்பிக்கிறேன். அதற்க்கு உங்கள் ஆதரவையும் அன்பையும் வேண்டுகிறேன். ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும்.

இப்பொழுதான் முதல் படி எடுத்து வைக்கிறேன். ஆதலால் ஏதேனும் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும். அதே போல் கோர்வையாக எழுத வராவிடில் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

16 comments:

Palaniappa Manivasagam said...

Good start!

Vignesh said...

All the Best Mr. Veerappan....

Vignesh said...

All the Best Mr. Veerappan!

விஜய்வீரப்பன் சுவாமிநாதன் said...

மிக்க நன்றி பழநி மற்றும் விக்னேஷ். :)

baskar said...

முதல் படியிலேயே நின்றுவிடாதீர்கள். தயக்கத்தைத் துறந்து துணிவாக எழுதுங்கள்- நிறைய எழுதுங்கள்.

வாழ்த்துகள்.

விஜய்வீரப்பன் சுவாமிநாதன் said...

நன்றி பாஸ்கர். பின் வரும் பதிவுகளில் உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Kamini Mani said...

yepppaaa...veerappa...all best...even I startd my blog with josh...now dunno find time... :(

Continue 2 write more...:)

Anonymous said...

Good Start...Keep Going....

Prasanna said...

Good Start...Keep Going....

Arumugapriya said...

Simple and interesting start....naan neraya puthagangal padithadillai...naan paditha puthagangalil enaku migavum pidithatu,keezhe vaikaamal padithadhu ponniyin selvan...ungal padhivu adhai meendum ninaivu koora vaithadhu ... nandri...thondarndhu ezhudungal...

பாரதசாரி said...

நான் உங்களுக்கு ஜூனியர் ;-)
Welcome!!!

Sarav said...

all the best nanba.... remembering fight for vikatan in room :)

shortfilmindia.com said...

சுஜாதா படித்து வளர்ந்த உங்களால் நிச்சயம் எழுத முடியும் வாழ்த்துகள். வரவேற்கிறேன். வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துவிடுங்கள். நண்பா.. cablesankar

மனம் திறந்து... (மதி) said...

//என்னை பொருத்த வரை வலைஉலகம் ஒரு ஆகச் சிறந்த ஊடகம். இதை கருத்துகள் பரிமாற்றத்திர்க்கும், அறிவின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் பிரச்சினைகளை பேசவும் உபயோகப்படுத்தலாம். ஆனால் இங்கே தனி மனித தாக்குதல்களும், ஏமாற்றங்களும் கவனம் ஈர்க்கின்றது.//

மனதைத் தொட்ட வரிகள்! (வெண்பூவில் பார்த்தேன்...அங்கே பெட்டி மூடப் பட்டிருக்கிறது... அதனால் இங்கே வந்தேன்!)

subbulakshmi said...

Vijay Good Job ! Keep Going ! All the Best

விஜய்வீரப்பன் சுவாமிநாதன் said...

Thanks ka.. :)
more posts to follow soon...